‘புத்தம் புது காலை…ஐந்து முன்னணி தமிழ் இயக்குனர்கள் கைகோர்த்துள்ள அந்தாலஜி படம்…!

‘புத்தம் புது காலை…ஐந்து முன்னணி தமிழ் இயக்குனர்கள் கைகோர்த்துள்ள அந்தாலஜி படம்…!

தமிழ் சினிமாவின் ஐந்து முன்னணி இயக்குனர்கள் இயக்கியுள்ள அந்தாலஜி படம் ஒன்று அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது.

இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ், சுதா கொங்கரா, சுஹாசினி மற்றும் ராஜிவ் மேனன் ஆகியோர் புத்தம் புது காலை என்ற படத்திற்காக இணைந்துள்ளனர். இந்தப் படம் அமேசான் ஒரிஜினல் வகையில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் அக்டோபர் 16-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருக்கிறது.

'புத்தம் புது காலை...ஐந்து முன்னணி தமிழ் இயக்குனர்கள் கைகோர்த்துள்ள அந்தாலஜி படம்...!

இந்தப் படத்தில் ப்ரோமோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. போஸ்ட்டரைப் பார்க்கும் போது காதல் கதையுள்ள படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தமிழில் அந்தாலஜி படங்களின் வரவு அதிகமாகி வருகிறது. கவுதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்கத்தில் ஆணவக் கொலையை அடிப்படையாகக் கொண்ட எடுக்கப்படும் படம் நெட்பிலிக்ஸில் வெளியாக இருக்கிறது.

Share this story