இது செம ஹாட் மச்சி... கிளாமரில் இளைஞர்கள் மனதைக் கிறங்கடிக்கும் ரித்திகா சிங்!
நடிகை ரித்திகா சிங் மாடர்ன் லுக்கில் காணப்படும் கிளாமர் புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.
சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘இறுதிசுற்று’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீராங்கணையாக சிறப்பாக நடித்து முதல் படத்திலே ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்ற ரித்திகா, அசோக் செல்வனுடன் அவர் நடித்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் அரவிந்த் சாமியுடன் ’வணங்காமுடி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் அருண் விஜய்யுடன் ‘பாக்ஸர்’ மற்றும் விஜய் ஆண்டனியுடன் கொலை ஆகிய படத்திலும் நடித்துள்ளார்.
சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா, தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ரித்திகா செம கிளாமராக காணப்படும் மாடர்ன் போட்டோஷூட் இளைஞர்கள் மனதைக் கிறங்கடித்து வருகிறது.