சென்னையில் சர்வதேச விழா… சூரரைப் போற்று உள்ளிட்ட 91 படங்கள் திரையிடல்…
53 நாடுகள் கலந்துகொள்ளும் சர்வதேச திரைப்பட விழா இன்று கோலகலமாக தொடங்கியது.

18-வது சர்வதேச திரைப்பட விழா இன்று சென்னையில் தொடங்கியது. இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் நடத்தும் இந்த விழாவை பி.வி.ஆர். இணைந்து வழங்குகிறது. கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த கலாச்சார தூதர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்த விழாவில் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, ஐ.சி.ஏ.எப். பொது செயலாளர் தங்கராஜ், நடிகைகள் சுகாசினி, சுகன்யா, இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், நடிகர் மனோபாலா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

8 நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச விழாவில் ‘பாஸ்வேர்டு’, ‘அக்கா குருவி’ உள்ளிட்ட 4 படங்கள் இந்தியன் பனோரமா பிரிவிலும்,‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘மழையில் நனைகிறேன்’, ‘க/பெ ரணசிங்கம்‘ ஆகிய 13 திரைப்படங்கள் தமிழ் படங்கள் பிரிவில் பங்கேற்க உள்ளன. இதுமட்டுமல்லாமல் சர்வதேச திரைப்படங்களும் இவ்விழாவில் திரையிடப்பட உள்ளது.