ஜிவி பிரகாஷ் சீனு ராமசாமி கூட்டணியின் புதிய படம்... இன்று பூஜையுடன் துவக்கம்!
இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் ஜிவி பிரகாஷ் கூட்டணி அமைக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
இசையமைப்பாளராக வெற்றி பெற்றுள்ள ஜிவி பிரகாஷ் தற்போது நடிகராகவும் மக்களைக் கவர்ந்து வருகிறார். இந்நிலையில் ஜிவி பிரகாஷ் தனது அடுத்த படத்தில் இயக்குனர் சீனு ராமசாமியுடன் கூட்டணி அமைக்க உள்ளார். அந்தப் படத்தில் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் காயத்ரி ஆண்டிபட்டியைச் சேர்ந்த நர்ஸ் ஆக நடிக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இறைச்சி கடை நடத்துபவராகவும் நடிக்கின்றனராம். ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் கலைமகன் முபாரக் இந்தப் படத்தை தயாரிக்கிறார். என்ஆர் ரகுநாதன் என்பவர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.
இன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. பூஜையில் ஜிவி பிரகாஷ், சீனு ராமசாமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
சீனுராமசாமி கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் 'மாமனிதன்' படத்தை இயக்கி உள்ளார். அந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.