எம்ஜிஆரிடம் சவால்விட்டு ஜெயித்த வாலி.!

எம்ஜிஆரிடம் சவால்விட்டு ஜெயித்த வாலி.!

1972 ஆம் ஆண்டு, எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபன் என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்தார். இந்தப் படம் உருவான நேரத்தில் எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்திருந்த நேரம். அதனால் இந்த பட உருவாக்கத்தில் பல பிரச்சனைகளை எம்ஜிஆர் சந்தித்து வந்தார். இந்த நேரத்தில் இந்தப் படத்தின் பாடல்களை எழுதும் கவிஞர்கள் பட்டியலில் வாலியின் பெயர் இல்லை.
எம்ஜிஆர் 100 | 56 - கேட்காமலேயே கொடுத்தவர்! | எம்ஜிஆர் 100 | 56 -  கேட்காமலேயே கொடுத்தவர்! - hindutamil.in
ஏற்கனவே ஒரு தடவை வாலிக்கும், எம்ஜிஆருக்கும் சிறு உரசல் வந்து அது பின்பு தீர்ந்து போனது. எம்ஜிஆருக்கும், கண்ணதாசனுக்கும் ஒருமுறை மனக்கசப்பு ஏற்பட்டது. அதன் பின், இனிமேல் என் படங்களுக்கு கண்ணதாசன் பாடல் எழுத மாட்டார் என்று அறிவித்த எம்ஜிஆர், வாலியை தன் படங்களின் ஆஸ்தான கவிஞர் ஆக்கினார் எம் ஜி ஆர். நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் போன்ற பாடல்களின் வாலியின் வரிகள் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றன.
உலகம் சுற்றும் வாலிபன் - தமிழ் விக்கிப்பீடியா
இதற்கு நடுவே, வாலிக்கும் எம்ஜிஆருக்கும் இருக்கும் நெருக்கத்தை பார்த்த சிலபேர், எம்ஜிஆரிடம் ஒரு விஷயத்தை பற்ற வைத்தனர். நாம் அனைவரும் பகுத்தறிவு கொள்கை கொண்டவர்கள், நாத்திகம் நமது கொள்கை, ஆனால் இந்த வாலி பட்டையும், குங்குமமும் ஆக உங்கள் அருகே இருந்து கொண்டிருக்கிறார். அவரை இனிமேல் இந்த கோலத்தில் வரவேண்டாம் என்று சொல்லுங்கள் என எம்ஜியாரிடம் சொல்ல, எம்ஜிஆரும் இதை வாலியிடம் சொல்லியுள்ளார். வாலி அதற்கு மறுப்பு தெரிவித்து, நான் எப்பொழுதும் இப்படித்தான் இருப்பேன் என்று சொல்ல, எம்ஜிஆர் பின் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்.
எம்ஜிஆரிடம் சவால்விட்டு ஜெயித்த வாலி.!
என்ன காரணமோ தெரியவில்லை உலகம் சுற்றும் வாலிபன் கவிஞர்கள் பெயர் பட்டியலில் வாலியின் பெயர் இல்லை. இதை அறிந்த வாலி எம்ஜிஆரிடம் சென்றார். நானும் இந்த படத்தில் பாடல் எழுதுவேன் என்று சொன்னார். எம்ஜிஆர் மறுத்துவிட்டார். உடனே வாலியைப் பார்த்து அந்த சவாலை விட்டார். என் பெயர் இல்லாமல் உங்கள் படம் வெளிவராது என்றார். எம்ஜிஆருக்கு கோபம் உச்சிக்கு ஏறிவிட்டது. என்னிடமே சவால் விடுகிறீர்களா என்றார். ஆம் நான் இப்போதும் சொல்கிறேன், என் பெயர் இல்லாமல் உங்கள் படம் வெளிவரவே வராது என்று வாலி எம்ஜிஆரிடம் சொல்ல. அது எப்படி ? என்று எம்ஜிஆர் கேட்கிறார்.
உலகம் சுற்றும் வாலிபன்'... 46 வயது ; - வசூல் மன்னன் எம்ஜிஆரின் மெகா ஹிட்! |  உலகம் சுற்றும் வாலிபன்'... 46 வயது ; - வசூல் மன்னன் எம்ஜிஆரின் மெகா ...
உங்கள் படத்தின் தலைப்பை மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள் என்று சொல்கிறார் வாலி. படித்துப் பார்த்த எம்ஜிஆரின் முகத்தில் புன்னகை பூக்கிறது. உலகம் சுற்றும் “வாலி”பனில் வாலியின் பெயரும் இருக்கிறது. அதன்பின் என்ன, அந்த படத்தில் “பச்சைக்கிளி முத்துச்சரம்” “தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே” “பன்சாயி, காதல் பறவைகள் பாடும் கவிதைகள்” என்று மூன்று சூப்பர் ஹிட் பாடல்களை எழுதினார் வாலி.
@ஜேம்ஸ் டேவிட்

Share this story