ஜான்வி கபூரை விளம்பரப்படுத்தும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம்  குஞ்சன் சக்சேனா…  முன்னாள் கப்பற்படை அதிகாரி குற்றசாட்டு!

ஜான்வி கபூரை விளம்பரப்படுத்தும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம்  குஞ்சன் சக்சேனா…  முன்னாள் கப்பற்படை அதிகாரி குற்றசாட்டு!

குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்  படம் ஜான்வி கபூரை விளம்பரப்படுத்துவதற்கு  மட்டுமே எடுக்கப்பட்டதே தவிர  நல்ல நோக்கம் ஏதுமில்லை என்று முன்னாள் கப்பற்படை அதிகாரி சந்தியா சூரி குற்றம் சாட்டியுள்ளார். 
இந்திய விமானப்படை பெண் விமானியாக இருந்த குன்ஜன் சக்ஸேனாவின் வாழ்க்கைப் படமான ‘குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது.
ஜான்வி கபூரை விளம்பரப்படுத்தும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம்  குஞ்சன் சக்சேனா…  முன்னாள் கப்பற்படை அதிகாரி குற்றசாட்டு!
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்திருக்கும் இந்தப் படத்தை கரண் ஜோஹரின் தர்மா ப்ரொடக்‌ஷன்ஸும், ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. சரண் சர்மா இயக்கியிருக்கும் இந்தப் படம், 1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்தின்போது இந்திய ராணுவ வீரர்களைக் காப்பாற்றிய பெண் விமானி குஞ்சன் சக்ஸேனாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படை,  குஞ்சன் சக்ஸேனா படத்தில்  இடம்பெற்றுள்ள சில காட்சிகள்  மற்றும் வசனங்கள் இந்திய விமானப்படை குறித்த தவறான பிம்பத்தை ஏற்படுத்துவதாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், நெட்ஃப்ளிக்ஸ்  மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகியோருக்கு கடிதம் எழுதியது. இந்திய விமானப் படையில் பாலின பாகுபாடு இருப்பதாக காட்சிப்படுத்தும் காட்சிகளையும் வசனங்களையும் நீக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
ஜான்வி கபூரை விளம்பரப்படுத்தும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம்  குஞ்சன் சக்சேனா…  முன்னாள் கப்பற்படை அதிகாரி குற்றசாட்டு!
இந்தப்  படம்  குறித்து  பேசிய இந்திய கப்பற்படையின் முன்னாள் அதிகாரியான சந்தியா சூரி 
ஒரு பாதுகாப்புத்துறை அதிகாரியாக இந்தப் படத்தை நான் பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் இந்தப் படத்தில் குஞ்சன் சக்ஸேனாதான் இந்திய விமானப்படையில் பறந்த முதல் பெண் விமானி என்று கூறப்படுகிறது. அதுவே முதலில் தவறான தகவல். அடுத்த படியாக அவர் துன்புறுத்தல்கள்  மற்றும் கேலிகளுக்கு ஆளாவது போல காட்டுவதன் மூலம் இந்திய விமானப்படையின் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. அதில் காட்டப்பட்டிருப்பது போல எதுவும் நடக்கவில்லை. இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க ஜான்வி கபூர் என்ற ஒருவரை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடனே எழுதப்பட்டிருக்கிறது.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Share this story