வசந்தபாலன் உடன் மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ்!

வசந்தபாலன் உடன் மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ்!

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.

இயக்குனர் வசந்தபாலன் தனது பள்ளி நண்பர்கள் நால்வருடன் இணைந்து ‘Urban Boyz‘ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார். தங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை வசந்த பாலன் இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். துஷாரா விஜயன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். ஜிவி பிரகாஷை தான் இயக்கிய ‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் செய்துவைத்தார் வசந்தபாலன். அதன் பின்னர் இந்தக் கூட்டணி பல ஆண்டுகளாக இணைந்து பயணித்து வருகின்றனர்.

தான் இயக்கியுள்ள ‘ஜெயில்’ படத்தில் ஜிவி பிரகாஷை நடிகராகவும் இணைத்தார் வசந்தபாலன். தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் புதிய படத்திற்காக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தியில் வெளியான ‘லிஃப்ட் பாய்’ என்ற படத்தின் ரிமேக் தான் இந்தப் படம் என்றும் கூறப்படுகிறது.

Share this story