எல்லோரும் தேடணும் என்பதற்காக ஒரு இயக்குனர் செய்த வேலையைப் பார்தீங்களா.!?

எல்லோரும் தேடணும் என்பதற்காக ஒரு இயக்குனர் செய்த வேலையைப் பார்தீங்களா.!?

சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து முதல் பட வாய்ப்பை பெற எவ்வளவு போராடனும் என்பது அந்த துறையிலிருப்பவர்களுக்குத்தான் நல்லா தெரியும். அப்படி வாய்ப்பு கிடைத்ததும் எப்படா அறிவிப்பு வரும், நம்ம பேரும் அதுல வரும் என்றுதான் எல்லோரும் காத்திருப்பார்கள். ஒரு இயக்குனர் மட்டும் விதி விலக்காக தனது பெயர் போடாமல் ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு மொத்த இண்டஸ்ட்ரியும் அதிர வைத்திருக்கிறார்!

எல்லோரும் தேடணும் என்பதற்காக ஒரு இயக்குனர் செய்த வேலையைப் பார்தீங்களா.!?

படத்தின் பெயர் ‘கண்ணகி’. ராம், பருத்திவீரன் தொடங்கி ஏகப்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராம்ஜிதான் இந்தப் படத்துக்கும் கேமராமேன். ஷான் ரகுமான் இசை என எல்லோருமே நம்பிக்கையான டெக்னீஷியன்கள். ஸ்கை மூன் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது என்பது வரை அதில் பதிவு பண்ணிய இயக்குனர் தன்னோட பெயரை மட்டும் போடாமல் விட்டிருக்கிறார்.

எல்லோரும் தேடணும் என்பதற்காக ஒரு இயக்குனர் செய்த வேலையைப் பார்தீங்களா.!?

இப்படியொரு ஆளா..! இதென்ன பைத்தியக்காரத்தனம் என்று விசாரித்தால்… ஜெயம்ரவியின் அண்ணன் மோகன்ராஜாவின் உதவியாளர் யஷ்வந்த்! நம்ம படைப்பை பார்த்து யார்றா இந்த டைரக்டர்ன்னு கேட்டாதான் சார், நாம செஞ்ச வேலையை உருப்படியா செஞ்சிருக்கோம்னு ஒரு நம்பிக்கை வரும். அதுக்கு முன்னால பேரைப் போட்டு என்ன ஆகப்போகுது என்று சொல்கிறார். இந்த உருட்டு புதுசா இருக்கே.!?

Share this story