கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘ஹெலன்’ படத்தின் தமிழ் ரீமேக் தலைப்பு இதுதானாம்…!!

கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘ஹெலன்’ படத்தின்  தமிழ் ரீமேக் தலைப்பு இதுதானாம்…!!

 மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் அன்னா பென் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘ஹெலன்’.  வினீத் ஸ்ரீனிவாசன் தயாரிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘ஹெலன்’ படத்தின்  தமிழ் ரீமேக் தலைப்பு இதுதானாம்…!!
மலையாளத்தில் ‘ஹெலன்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. மேலும், ‘ஹெலன்’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளார். அதில் அவரது மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார்.
கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘ஹெலன்’ படத்தின்  தமிழ் ரீமேக் தலைப்பு இதுதானாம்…!!
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர்  அருண் பாண்டியன் கைப்பற்றி, தயாரித்து வருகிறார்.  இதில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடித்து வருகிறார்.. இந்தப் படத்தை ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’  பட இயக்குநர் கோகுல் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘ஹெலன்’ படத்தின்  தமிழ் ரீமேக் தலைப்பு இதுதானாம்…!!
இந்நிலையில் தற்போது இந்தப் படத்துக்கு ‘அன்புக்கு இனியாள்’ என்று பெயரிடப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

Share this story