‘ஹெலன்’ தமிழ் ரிமேக்கின் பர்ஸ்ட் லுக் வெளியானது! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா!?

‘ஹெலன்’ தமிழ் ரிமேக்கின் பர்ஸ்ட் லுக் வெளியானது! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா!?

மலையாளத்தில் வெளியான ‘ஹெலன்’ படத்தின் தமிழ் ரீமேக் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் நடிகை அன்னா பென் நடிப்பில் வெளியான ‘ஹெலன்’ திரைப்படம் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் ஹிட் அடித்தது.

‘ஹெலன்’ தமிழ் ரிமேக்கின் பர்ஸ்ட் லுக் வெளியானது! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா!?

எனவே மற்ற மொழியில் இந்தப் படத்தை போட்டிபோட்டுக் கொண்டு ரீமேக் செய்ய முன்வந்தார்கள். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் அருண் பாண்டியன் கைப்பற்றினார்.

மேலும் தனது மகள் கீர்த்தி பாண்டியனை அதில் கதாநாயகியாக நடிக்க வைக்க உள்ளார். இந்தப் படத்தை ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

மேலும் தனது மகள் கீர்த்தி பாண்டியனை அதில் கதாநாயகியாக நடிக்க வைக்க உள்ளார். இந்தப் படத்தை ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது. படத்திற்கு அன்பிற்கினியாள் என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் போஸ்டரில் அருண்பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் காணப்படுகின்றனர்.

மலையாளத்தில் அன்னா பென் தனது இயல்பான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தார். கதை மிகவும் எளிதாக இருந்தாலும் நடிகர்களின் இயல்பான தேர்ந்த நடிப்பும், அழகான காட்சிப்படுத்தலும் தான் படத்தை வெற்றியடையச் செய்தன.

தமிழில் ரீமேக் செய்யும் போதும் அதே எளிமை மற்றும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். கீர்த்தி பாண்டியன் இதைத் திறம்பட கையாள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story