‘அவதார்’ அடுத்த பாகம் வருமா.. வாராதா ?... ஜேம்ஸ் கேமரூனின் அசத்தல் விளக்கம் !

avatar 2

‘அவதார்’ படத்தின் அடுத்த பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு புதிய விளக்கத்தை இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கொடுத்துள்ளார். 

உலக அளவில் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘அவதார் 2’. இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் பாகத்தை விட புதுவித அனுபவத்தை இரண்டாம் பாகம் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

avatar 2

சுமார் 4500 கோடியில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது வரை 12 ஆயிரம் கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது. அசுர வேட்டை நடத்தியுள்ள இந்த படத்தின் வெற்றி படக்குழுவினரை மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகுமா என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

avatar 2

இதற்கிடையே இரண்டாம் பாகத்தின் வசூலை பொறுத்தே அடுத்த பாகங்களை உருவாக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும், அப்படி எதிர்பார்த்தபடி வசூல் இருந்தால் இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் மீதமுள்ள மூன்று பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என கடந்த ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார். 

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியால் அடுத்த பாகங்கள் எப்போது உருவாகும் என்ற கேள்விக்கு இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பதிலளித்துள்ளார். அதில், எதிர்பார்த்ததை விட இரண்டாம் பாகம் பெரிய வெற்றியை பெற்றுள்ளதால் அடுத்தடுத்த பாகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியாகும் என கூறியுள்ளார். 

 

Share this story