நெட்ப்ளிக்ஸில் அதிக பார்க்கப்பட்ட படம் ‘தி கிரேமேன்’... தனுஷ் படத்திற்கு கிடைத்த கெளரவம் !

the grayman

தனுஷின் 'கிரேமேன்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் புதிய சாதனை படைத்துள்ளது. 

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் கேப்டன், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட படங்களை இயக்கியவர்கள்  ஜோய் ருசோ, ஆண்டனி ருசோ. இவர்கள் இயக்கத்தில் உருவான திரைப்படம்  'தி கிரேமேன்'. கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான மார்க் கிரீனியின் நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது.  

the grayman

இந்த படத்தில் ரையன் கோஸ்லிங், கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிகா ஹென்விக், வாக்னர் மவுரா, ஜூலியா பட்டர்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் தனுஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளளிலும், ஜூலை 22-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடித்தளத்திலும் வெளியானது.

the grayman

 இந்த படம் ஆங்கிலத்தை தவிர்த்து தமிழ் உள்ளிட்ட சில மொழிகளிலும் வெளியானது. இந்நிலையில் இந்த படம் உலக அளவில் நெட்ஃப்பிளிக்ஸில் அதிக பேர் பார்க்கப்பட்ட படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சாதனை தனுசுக்கு மிகப்பெரிய கெளரவமாக கருதப்படுகிறது. 

Share this story