அவதார் 3-ம் பாகத்தில் மற்றொரு புதிய உலகம்

அவதார் 3-ம் பாகத்தில் மற்றொரு புதிய உலகம் 

ஹாலிவுட் சினிமாவில் உச்சம் தொட்ட திரைப்படங்களில் ஒன்று ‘அவதார்’. கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத மாயஜால உலகத்தை கண்முன்னே நிறுத்தி நம்மை வியப்பில் ஆழ்த்திய திரைப்படம் அவதார். அந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு 13 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் வெளியானது.  பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான இப்படம் ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’ என்ற தலைப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியானது.  உலகில் உள்ள 160 மொழிகளில்  வெளியான இப்படம்கடலுக்கடியில் உள்ள அதிசயங்களை காட்டி ரசிகர்களை மிரட்டியது. ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 7000 கோடிக்கு மேல் இப்படம் வசூல் சாதனை படைத்தது. இந்தியாவின் பல மாநிலங்களில் பல மொழிகளில் வெளியான இப்படம் சுமார் 300 கோடி ரூபாய் வசூலித்தது. 

அவதார் 3-ம் பாகத்தில் மற்றொரு புதிய உலகம் 

அவதார் படத்தின் 3-வது பாகம் டிசம்பர் 19 2025ம் ஆண்டு வெளியாகும் என ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.  மூன்றாவது பாகத்தில் மற்றொரு புதிய உலகம் வித்தியாசமான கதை மற்றும் பல அதிரடி காட்சிகளை காணலாம் என்று உறுதி அளித்துள்ளார்
 

Share this story