மீண்டும் ‘அவதார்’ படத்திற்கு ஆஸ்கர்... ஆர்ப்பரிக்கும் உலக ரசிகர்கள் !

avatar

‘அவதார்’ படத்தின் இரண்டாவது பாகத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது உலக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான ‘அவதார்’ திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. முழுக்க முழுக்க கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகியிருந்த அப்படம் உலகின் அதிக வசூல் செய்த படைத்த படம் என்ற சாதனையை படைத்தது. மோஷன் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் நாம் இதுவரை காணாத உலகத்தை கண் முன்னே காண்பித்திருந்தார் ஜேம்ஸ் கேமரூன். 

avatar

இந்தப் படத்தில் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாவது பாகம் ‘அவதார் : தி வே ஆப் வாட்டர்’ என்ற தலைப்பில் உருவாகி கடந்த ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுதும் 50 ஆயிரம் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பயன்படுத்தப்பட்ட விஎப்எக்ஸ் காட்சிகள் ரசிகர்களை மிரட்டியது. 

avatar

ஏற்கனவே ‘அவதார்’ முதல் பாகத்திற்கு 4 விருதுகள் கிடைத்தது. இந்நிலையில் ‘அவதார்’ இரண்டாவது பாகத்திற்கு ஒரு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த விஎப்எக்ஸ் காட்சியமைப்பிற்காக இந்த விருது படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக ‘அவதார்’ படத்திற்கு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டது உலக ரசிகர்களை மகிழ்ச்சி ஆழ்த்தியுள்ளது.  

Share this story