பிரிட்டிஷ் நடிகர் டாம் வில்சன் காலமானார்

பிரிட்டிஷ் நடிகர் டாம் வில்சன் காலமானார்

ஹாலிவுட் நடிகரான டாம் வில்கின்சன் 1948- ஆண்டு பிறந்தார். கேன்டர்பரியில் உள்ள கென்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் அமெரிக்க இலக்கியத்தில் பட்டம் பெற்ற அவர், பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதே, நடிப்பிலும் இயக்கத்திலும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதையடுத்து 1976-ம் ஆண்டு ஜோசப் கான்ராட் சிறு நாவலான தி ஷேடோ லைனைத் தழுவி எடுக்கப்பட்ட ஸ்முகா படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். தி ஃபுல் மான்டி, ஷேக்ஸ்பியர் இன் லவ் மற்றும் தி பெஸ்ட் எக்ஸோடிக் மேரிகோல்ட் ஹோட்டல் போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்ற நடிகர் வில்கின்சன். 130-க்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இரண்டு முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அவருக்கு BAFTA, ஒரு எம்மி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளார். 

பிரிட்டிஷ் நடிகர் டாம் வில்சன் காலமானார்

இந்நிலையில், 72 வயதான டாம் வில்கின்சன் நேற்று உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இவரது மறைவுக்கு பலரும் டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 

Share this story