கிளிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் ‘ஓப்பன்ஹெய்மர்’... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Oppenheimer

கிளிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹாலிவுட்டில் பிரபல இயக்குனராக இருப்பவர் கிறிஸ்டோபர் நோலன். அவர் இயக்கத்தில் வெளியான மெமன்டோ, தி ப்ரஸ்டீஜ், இன்செப்ஷன், இண்டெர்ஸ்டெல்லார் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்றவை. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான ‘டெனெட்’ திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

Oppenheimer

 அதனால் அவரின் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த வகையில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘ஓப்பன்ஹெய்மர்’. இந்த படத்தில் சிலியன் மர்பி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ராபர்ட் டௌனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பக் உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்கள் நடித்துள்ளனர். 

இரண்டாம் உலகப் போரின்போது அணுகுண்டு தயாரிக்க உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மரை பற்றி இப்படம் பேசுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூலை 21-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

Share this story