திரைப்படமாகும் 'எலான் மஸ்க்' வாழ்க்கை!

photo

உலக பணக்காரர்களில் முன்னிலையில் உள்ள எலான் மஸ்க் வாழ்க்கை திரைப்படமாக உருவாக உள்ளது.

photo

டாரன் ஆர் நோப்ஸ்கி என்ற ஹாலிவுட் பட இயக்குநர் தான் எலான் மஸ்க் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளாராம். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த மஸ்க் தனது அசாத்திய திறமையால் இன்று உலக பணக்காரராகியுள்ளார். டெஸ்லா என்ற தானியங்கி கார்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் மஸ்க், விண்வெளி மீத கொண்ட காதல் காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் என்ற ஆராய்ச்சி மைய்யத்தையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் கூட ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி அதற்கு எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார். இந்த நிலையில் சமீபத்திய தகவலாக அவரத் வாழ்கையில் அவர் சந்தித்த, வெற்றி, தோல்வி, காதல் என அனைத்தும் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story