7 ஆஸ்கர் விருதுகள்... மாபெரும் சாதனை படைத்த ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’...

oscar

 ‘எவ்ரிதிங் எர்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ என்ற படம் 7 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. 

 உலக அளவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம்  ‘எவ்ரிதிங் எர்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’. ஹாலிவுட்டில் பிரபல இயக்குனர்களாக இருக்கும் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கியிருந்தனர். இந்த படத்தில் நடிகை மிஷெல் யோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

oscar

இந்நிலையில் 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. உலக சினிமா கலைஞர்கள் குவிந்த இந்த விழாவில் ‘எவ்ரிதிங் எர்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம் 7 விருதுகள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சிறந்த நடிகைக்காக ஆஸ்கர் விருதை மிஷெல் யோ பெற்றார். 

oscar

சிறந்த இயக்குனர்களுக்கான விருதை டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் ஆகிய இருவரும் பெற்றனர். இதுதவிர சிறந்த படத்தொகுப்புக்கான விருதை பால் ரோஜர்ஸ் பெற்றுக்கொண்டார். அதோடு சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உள்ளிட்ட 7 விருதுகளை வென்று உலக சாதனை படைத்தது. இந்த விருது பெற்ற படக்குழுவினருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

Share this story