ஹாலிவுட் நடிகையாக மாற நினைத்த மாடல் அழகி.. திடீரென மரணமடைந்ததால் அதிர்ச்சி !

Christina Ashten Gourkani.

 பிரபல மாடல் அழகி திடீரென மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹாலிவுட் உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் கிம் கர்தாஷ்யன். பல சூப்பர் ஹிட் ஹாலிவுட் திரைப்படங்களில் உலக அளவில் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளார். அதனால் உலகம் முழுவதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது திரைப்படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் ஹாலிவுட் நடிகை கர்தாஷ்யனின், தீவிர ரசிகையாக இருந்தவர் கிறிஸ்டினா ஆஸ்டன் கோர்கானி. மாடல் அழகியான அவர், கிம் கர்தாஷியன் போன்று மாற பல பிளாஸ்டிக் சர்ஜரிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் திடீரென 32 வயதான கிறிஸ்டினா மரணமடைந்தார். 

இளம் வயது மாடல் அழகியின் மரணம் ஹாலிவுட் உலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை கிறிஸ்டினாவின் மறைவுக்கு தவறான பிளாஸ்டிக் சர்ஜரியே காரணம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Share this story