500 கோடி பார்வையாளர்களை கடந்தது கங்கம் ஸ்டைல் பாடல்
1704021143785
கடந்த 2012-ம் ஆண்டு கொரி பாடகர் பிஎஸ்ஒய் பாடி, நடனமாடி வெளியாகிய பாடல் தான் கங்கம் ஸ்டைல். இந்த பாடல் சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பலரும் இந்த பாடலின் அர்த்தம் தெரியாதபோதிலும், பாடலை அதிக அளவில் கேட்டு ரசித்தனர். இன்டர்நெட் பயன்பாடு குறைந்த இருந்த அன்றே, இது பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இதனை மையப்படுத்தி ஒரு சில படங்களில் காமெடி காட்சிகளும் வெளியாகின. இந்நிலையில், தற்போது பாடல் வெளியாகி 13 ஆண்டுகள் கடந்து விட்டன. தற்போது வரை இப்பாடலை 500 கோடி பார்வையாளர்கள் கேட்டு ரசித்துள்ளனர். கொரிய வரலாற்றில் சர்வதேச அளவிலான வரவேற்பை ஏகபோகமாக பெற்ற ஒரே பாடல் இப்பாடல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.