காட்ஸில்லா அண்ட் காங்: ஓர் புதிய சாம்ராஜ்யம் –மிரட்டும் டிரைலர் இதோ!

photo

பிரம்மாண்டமாக தயாராகியுள்ள காட்ஸில்லா அண்ட் காங்: ஓர் புதிய சாம்ராஜ்யம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் காட்ஸில்லா அண்ட் காங்: ஓர் புதிய சாம்ராஜ்யம் இந்தப்படத்தில் கெய்லி ஹாட்டில், ரெபேக்கா ஹால், மில்லி பாபி பிரவுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.   அதில் உலகத்தின் மேற்பரப்பில் மட்டுமே உயிர்கள் இருக்க முடியும் என நாம் நம்பிக்கொண்டு இருந்தோம். ஆனால் இன்னும் நமக்கு தெரியாதது என்னலாம் இருக்கோ என்ற வாய்ஸ் ஓவருடன் துவங்குகிறது டிரைலர் . மிரட்டலான காட்சிகள் காட்ஸில்லா மற்றும் காங் வரும் காட்சிகள் அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

Share this story