‘ஹாரிபாட்டர்’ நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !

Paul Grant

ஹாரிபாட்டர் படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் பால் கிரான்ட் திடீரென உயிரிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

ஹாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்தவர் நடிகர் பால் கிரான்ட். உலக ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘ஹாரி பாட்டர்’ படத்தின் மூலம் பால் கிரான்ட் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு ‘ஸ்டார் வார்ஸ் : ரிட்டர்ன் ஆஃப் தி ஜெடி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். 

Paul Grant

இவரின் உயரம் மிகவும் குறைவானது. அதாவது 4 அடி 4 அங்குலமே உயரம் கொண்ட அவர், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். ஹாரிபாட்டர் படத்தில இவரது கதாபாத்திரத்தில் சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். 

Paul Grant

56 வயதாகும் அவர் லண்டன் ரயில் நிலையம் அருகே கடந்த 16-ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. அவசர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வந்த நிலையில் மருத்துவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து பால் கிரான்ட் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இது உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Share this story