பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரே ப்ராவர் மறைவு
ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் மூலம் பிரபலமான நடிகர் ஆண்ட்ரே ப்ராவர் காலமானார். 2013ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி ரசிகர் கூட்டத்தை ஈர்த்த நகைச்சுவை தொடர் ‘ப்ரூக்லீன் 99’. இதில் கேப்டன் ரேமண்ட் ஹோல்ட் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆண்ட்ரே ப்ராவர். கண்டிப்பான அதே சமயம் நகைச்சுவை கலந்து அந்த கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. 1998ஆம் ஆண்டு ’ஹோமிசைட்: லைஃப் ஆன் ஸ்ட்ரீட்’ என்ற தொடருக்காக சிறந்த நடிகருக்கான எம்மி விருதை ஆண்ட்ரே ப்ராவர் வென்றார். அதே போல, 2006ஆம் ஆண்டு வெளியான ‘தீஃப்’ தொடருக்காவும் சிறந்த நடிகருக்கான எம்மி விருது வென்றார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.