தூக்கத்திலேயே உயிரிழந்த பிரபல ஹாலிவுட் நடிகர்... சோகத்தில் ரசிகர்கள் !

Jim Brown

 பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் ப்ரவுன் திடீரென காலமாகியுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஹாலிவுட் உலகில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் ஜிம் ப்ரவுன். 2L60T The Running Man, 100 Rifles 6T60T L160 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது சிறப்பாக நடிப்பால் ரசிகர்களை மிகவும் மனம் கவர்ந்துள்ளார். பிரபல நடிகராக இருந்த அவர், உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரராகவும் இருந்து வந்தார். அவருக்கு அமெரிக்காவின் கால்பந்து மைதானம் ஒன்றின் வெளியே சிலையும் வைக்கப்பட்டுள்ளது. 

Jim Brown

பன்முக ஆர்வம் கொண்ட அவர், சமூக ஆர்வலராகவும் இருந்து வந்தார். 87 வயதாகும் ஜிம் ப்ரவுன், வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போதே அவர் உயிர் பிரிந்துள்ளது. நடிகர் ஜிம் ப்ரவுனின் திடீர் மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story