பிரண்ட்ஸ் பட நடிகரின் மறைவுக்கு இதுதான் காரணமா?
பிரபல ஹாலிவுட் தொடரான Friends தொடரில் சாண்ட்லர் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் மேத்யூ பெர்ரி. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மேத்யூ பெர்ரி வசித்து வந்தார். அவர் பிரண்ட்ஸ் தொடர் மூலமாக பிரபலமானவர். அவர் கடந்த அக்டோபர் 29-ம் தேதி வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதிகாலை வீட்டிற்கு வந்த அவர் அவரது உதவியாளரை முக்கிய வேலையாக வெளியில் அனுப்பியுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது மேத்யூ நீச்சல் குளத்தில் மிதப்பதை கண்டு அதிர்ந்து அவசர என்ணிற்கு அழைத்துள்ளார். அவர்கள் மேத்யூ இறந்த தகவலை உறுதி செய்தனர்.
இந்த நிலையில், நடிகர் மேத்யூ பெர்ரி, அளவுக்கு அதிகமாக கெட்டமைன் எனப்படும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொண்டது தான் அவரது திடீர் உயிரிழப்பிற்கு காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.