வில் ஸ்மித்தை பிரிய ஜடா மறுப்பு... ஒற்றுமையாக வாழ முயற்சிக்கிறோம்...

வில் ஸ்மித்தை பிரிய ஜடா மறுப்பு... ஒற்றுமையாக வாழ முயற்சிக்கிறோம்...

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். இவர் மனைவி ஜடா பிங்கெட். கடந்த வருடம் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தனது மனைவி ஜடா பிங்கெட்டை கேலி செய்த வர்ணணையாளர் கிறிஸ் ராக்கை, வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்தது அப்போது பரபரப்பானது. இந்நிலையில் நடிகர் வில் ஸ்மித்தும், ஜடா பிங்கெட்டும் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வரும் தகவல் வெளியானது. அண்மையில், ஜடா பிங்கெட் அளித்த பேட்டி ஒன்றில், 2016ம் ஆண்டில் இருந்தே இருவரும் பிரிந்து வசித்து வருவதாகத் கூறினார். இது வில் ஸ்மித் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, பாடகர் ஆகஸ்ட் அல்சினாவை ஜடா காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இதனால் வில் ஸ்மித்தும் ஜடாவும் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது.

வில் ஸ்மித்தை பிரிய ஜடா மறுப்பு... ஒற்றுமையாக வாழ முயற்சிக்கிறோம்...

ஆனால், இதை வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் மறுத்துள்ளார். வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையாக வாழ்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Share this story