கணவரை பிரிந்த கவலையில் தினமும் மது அருந்தும் ஜெனிபர் லோபஸ்

jenifer lopez
பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபசும், பிரபல நடிகரான பென் அப்லெக்கும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக அவர்கள் வலம் வந்தனர். இந்நிலையில் பென் அப்லெக்கிடம் இருந்து விவாகரத்து கோரி ஜெனிபர் லோபஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் தாங்கள் கடந்த ஏப்ரல் 26-ந்தேதி முதல் பிரிந்து வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெனிபர் லோபஸ் விவாகரத்து மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், பென் அப்லெக்கை பிரிவதற்கு ஜெனிபர் லோபஸ் தயாராக இல்லை என்றும், இந்த பிரிவை நினைத்து அவர் தினமும் மது வருந்துவதாக அவரது நெருங்கிய நண்பர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பென் அப்லெக்குடன் இணைந்து வாழவே ஜெனிபர் லோபஸ் விரும்பியதாகவும், ஆனால் பென் அப்லெக் அதற்கு தயாராக இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதன் விளைவாக எப்போதாவது மது அருந்தி வந்து ஜெனிபர் லோபஸ் இப்போது தினமும் மது அருந்துகிறார் என்று சொல்லப்படுகிறது.

Share this story