மிஷன் இம்பாசிபிள் 8: முதன்முறையாக சண்டை காட்சிக்கு டூப் போட்ட டாம் குரூஸ்...!

tom cruise

ஹாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஆக்சன் படங்களின் பட்டியலில் 'மிஷன்: இம்பாசிபிள்' படங்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். அதுவும் டாம் குரூஸ் நடிப்பு மற்றும் ஸ்டண்ட் காட்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம். ஆக்சன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996 ஆம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன. கடந்த ஆண்டு ஜூலை இந்த சீரிஸின் 7 பாகம் வெளியானது. அதில் 'ஏஐ தொழில்நுட்பம்' மையமாக வைத்து முந்தைய பாகம் உருவாக்கப்பட்டது. முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

mission impossible

கடந்த பாகத்தில் அவர் எந்த வித டூப் இல்லாமல் மலையில் இருந்து கீழே குதித்த காட்சி இணையத்தில் மிகப்பெரிய வைரலானது. இந்நிலையில், மிஷன் இம்பாஸிபிள் 8ம் பாகத்திற்கான டிரெய்லரை படக்குழுவும், படத்தின் நாயகன் டாம் குரூஸும் வெளியிட்டுள்ளனர். மேலும் அடுத்த ஆண்டு மே 23-ம் தேதி இப்படம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் மிகுந்த காட்சிகளால் டிரெய்லர் நிரம்பியுள்ளது. முந்தைய பாகத்தில் ஒரு கீயை தேடி அவர் பயணம் செய்வார். இந்த பாகமும் அதை தேடியே கதைக்களம் அமைந்துள்ளது.இந்நிலையில், மிஷன்: இம்பாசிபிள் 8-ம் பாகத்திற்கான ஆக்சன் காட்சிகளில் டாம் குரூஸுக்கு டூப் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. 62 வயதான டாம் குரூஸ் தனது சினிமா வாழ்க்கையில் முதன் முறையாக சண்டை காட்சிக்கு டூப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story