ஆக்ஷனில் அடித்து நொறுக்கும் டாக் குரூஸ்... ‘மிஷன் இம்பாசிபிள்’ டிரெய்லர் வெளியீடு !

Mission Impossible

டாம் குரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன் இன்பாசிபிள்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

உலக ஹாலிவுட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் பார்க்க காத்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் இன்பாசிபிள்’. ஏற்கனவே இந்த படத்தின் 6 பாகங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் அடுத்த பாகமாக வெளி வருகிறது மிஷன் இன்பாசிபிள் 7வது பாகம். 

Mission Impossible

ஆக்ஷன் கதைகளில் நடித்து புகழ்பெற்ற டாம் குரூஸ் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டாம் குரூசுடன் இணைந்த இந்த படத்தில் சிமோன் பிக், ரெபேக்கா, வெனேசா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘பிளாக் ஆடம்’ படத்திற்கு பின்னணி இசையை வெறித்தனமாக கொடுத்த லார்னி பால்பி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் எம்சி குரோரி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. டாம் குரூஸின் ஆக்ஷன் அதிரடியில் அடித்து நொறுக்கும் இந்த டிரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளது. 


 

Share this story