அதகளம் செய்யும் ப்ரியங்கா சோப்ரா... 'சீட்டடெல்' வெப் தொடரின் டிரெய்லர் வெளியீடு !

citedal

ப்ரியங்கா சோப்ரா நடிக்கும் 'சிட்டடெல்' வெப் தொடரின் தமிழ் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.  

சமீபகாலமாக வெப் தொடர்கள் என்றாலே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  ‌அந்த வகையில் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வெப் தொடர் 'சிட்டடெல்'. 6 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரின் முதல் சீசன் வரும் ஏப்ரல் மாதம் அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது. அதன்பிறகு மே மாதம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் ஒரு எபிசோட் வெளியிடப்படும் என தெரிகிறது.‌

citedal

இந்த வெப் தொடரை ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO மற்றும் ஷோரன்னராக டேவிட் வெயில் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த வெப் தொடரில் ஸ்டான்லி டூசி, லெஸ்லி மான்வில்லே, ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என இந்தியாவின் பல மொழிகளில் இந்த வெப் தொடர் வெளியாகிறது. அதுமட்டுமின்றி உலகின் 240 நாடுகளில் இந்த வெப் தொடர் வெளியிடப்படுகிறது. 

இந்நிலையில் இந்த வெப் தொடரின் தமிழ் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ப்ரியங்கா சோப்ரா ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்துள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிழல் உலகை ஆண்டு கொண்டிருந்த அதிகாரமிக்க சிட்டடெல் உளவு அமைப்பு அழிக்கப்பட்டது. அதில் உயர்நிலை உளவுத்துறை அதிகாரிகளாக இருந்த மேசன் கைன் மற்றும் நதியா சென் ஆகிய இருவரும் மயிலிழையில் உயிர் தப்பிக்கின்றனர். ஆனாலும் அவர்கள் கடந்த காலங்களில் நடந்தவற்றை மறந்துவிட்டு மறைந்த வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து மீண்டும் புத்துயிர் பெற்று எதிரிகளை அழிப்பது கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. 


 

Share this story