ஹாலிவுட்டில் நடிக்க தயாரான 'ராம்சரண்' – அவரே சொன்ன அப்டேட்.

photo

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம்சரண், ஹாலிவுட் படத்தில் நடிக்க போவதாக அவரே கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

photo

ராம்சரண் 2007ஆம் ஆண்டு வெளியான சிறுத்தை திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவிற்குள் காலடி எடுத்துவைத்தார். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகர் அந்தஸ்தை கைப்பற்றினார். சிரஞ்சீவியின் மகனாக இருந்தாலும், தனது கடினஉழைப்பால் இன்று ஹாலிவுட் வரை உயர்ந்துள்ளார்.

photo

அந்த வகையில் ராம்சரண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டான திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த படத்தை ராஜமௌலி இயக்க, எம் எம் கீரவாணி இசையமைத்திருந்தார். படத்தை போலவே பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.  அதிலும் குறிப்பாக படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை தட்டி தூக்கியது.

photo

இதன் மாபெரும் வெற்றியை தொடர்ந்து  ராம்சரண் ஷங்கரின் RC15 திரைப்படத்தின் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஹாலிவுட் இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார். இந்த தகவலால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share this story