மீண்டும் MCU-வில் இணைந்த ராபர்ட் டவுனி ஜூனியர்
ஹாலிவுட்டில் பிரபல நிறுவனங்களில் ஒன்று மார்வல் ஸ்டூடியோஸ். இதன் "அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே" நிகழ்ச்சி சான் டியாகோ காமிக்-ஆன் 2024-இல் நடைபெற்றது. இந்த காமிக் ஆன் நிகழ்வில் மார்வல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் "டாக்டர் டூம்" படத்தின் புதிய அப்டேட் வெளியானது.இந்த படத்தில் புகழ்பெற்ற நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்கிறார். படம் தொடர்பான அறிவிப்பை ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் மார்வல் ஸ்டூடியோஸ் தலைவர் கெவின் ஃபெய்க் இணைந்து வெளியிட்டனர். உலகளவில் புகழ்பெற்ற "அயன்மேன்" கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர், டாக்டர் டூம் படத்தில் ஃபென்டாஸ்டிக் ஃபோரில் புதிய வில்லின் கதாபாத்திரமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அயன்மேன் மற்றும் மார்வெல் சினிமேடிக் யூனிவர்ஸில் கதாநாயகனாக ராபர்ட் டவுனி ஜூனியர், டாக்டர் டூம் படத்தின் மூலம் வில்லன் நடிகராக மாறுகிறார்.மார்வல் யூனிவர்சில் அதிக ரசிகர்களை கொண்ட ராபர்ட் டவுனி ஜூனியர் மீண்டும் எம்சியூ-வில் இணைந்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், புதிய மார்வல் படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இருக்கிறது.
#WATCH | நாயகன் மீண்டும் வரார்..!
— Sun News (@sunnewstamil) July 28, 2024
மார்வெல்ஸின் ‘AVENGERS DOOMSDAY' படத்தில் DR DOOMஆக நடிக்கிறார் ராபர்ட் டௌனி ஜூனியர்.. சான்ட்டியேகோ காமிக் கானில் மாஸ் அறிவிப்பு!
2026ம் ஆண்டு மே மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது#SunNews | #AvengersDoomsday | #SanDiegoComicCon pic.twitter.com/8E9lDMMBT1