'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் 2ம் பாகம் அப்டேட்

slum dog millinaire

இங்கிலாந்து இயக்குநர் டேனி பாய்ல் இயக்கிய படம், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’. இந்தியாவில் உருவான இந்தப் படம் 2009-ம் ஆண்டு வெளியானது. இதில் தேவ் படேல், ஃபிரீடா பின்டோ, அனில் கபூர், இர்பான் கான் பலர் நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார். இந்தப் படம் 8 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.oscar

இந்நிலையில், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் அடுத்த பாகம் மற்றும் டிவி உரிமையை, லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ‘பிரிட்ஜ் 7’ என்ற நிறுவனத்தின் ஸ்வாதி ஷெட்டி, கிரான்ட் கெஸ்மேன் ஆகியோர் பெற்றுள்ளனர். இதனால் இந்தப் படத்தின் 2-ம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகத் தெரிகிறது.

“சில கதைகள் எப்போதும் நம் மனதில் தங்கும். ஸ்லம்டாக் மில்லியனர் படம் அதில் ஒன்று. அதன் விவரிப்பு உலகளாவியது, கலாச்சார மற்றும் எல்லைகளைத் தாண்டி, நாம் விரும்பும் வகையான கதையை கொண்டது" என்று ஸ்வாதி ஷெட்டி தெரிவித்துள்ளார்.  

Share this story