உலகின் மிகப்பெரிய திரையரங்கம் அமெரிக்காவில் திறப்பு

உலகின் மிகப்பெரிய திரையரங்கம் அமெரிக்காவில் திறப்பு

உலகின் மிகப்பெரிய பிரம்மாண்டமான திரையரங்கம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் திறக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களை பிரம்மாண்டமான திரையரங்குகளில் பார்ப்பது ரசிகர்களுக்கு அலாதியான உற்சாகத்தை வழங்கும். அந்த வகையில் சீனா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மாபெரும் திரைகளுடன் திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், தெலுங்கானா மாநிலத்தில் பிரம்மாண்டமான திரை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மற்ற திரையரங்குகளின் பிரம்மாண்டத்தை முறியடித்து, உலகின் மிகப்பெரிய திரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் 18கே ரிசல்யூசனுடன் இங்கு திரைப்படம் திரையிடப்படுகிறது. மேலும், ஒரு லட்சம் ஸ்பீக்கர்கள் திரையரங்கில் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல, ஒரே வினாடியில் 60 பிரேம்கள் இந்த திரையில் காட்சிப்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இது தவிர, பார்வையாளர்களுக்கு பிரம்மாண்டமான அனுபவத்தை வழங்கும் நோக்கில்,   கோள வடிவத்தில் இந்த திரை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 18 ஆயிரம் பேர் அமர்ந்து திரைப்படம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் இங்கு திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story