‘இந்தியன் 2’ படப்பிடிப்பு எப்போது? படக்குழுவிடமிருந்து கசிந்த தகவல்..

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு எப்போது?  படக்குழுவிடமிருந்து கசிந்த தகவல்..

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் துவங்க இருப்பதாக படக்குழுவினரிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.

பிரமாண்ட இயக்குனர் சங்கர், உலக நாயகன் கமல் கூட்டணியில் தயாராகும் படம் இந்தியன் 2. இந்தியன் படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து வெகு நாட்களாக இந்தியன் 2 படம் எப்போது எடுக்கப் போகிறார் என எதிர்பார்ப்பு இருந்து. அதை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியன் 2 எடுக்கப்போவதாக அறிவித்து, அதற்கான படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வந்தன.

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு எப்போது?  படக்குழுவிடமிருந்து கசிந்த தகவல்..

லைக்கா தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர். படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டியில் வேகமாக நடந்து வந்தநேரத்தில் திடீரென பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் சிலர் உயிரிழந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு எப்போது?  படக்குழுவிடமிருந்து கசிந்த தகவல்..

இதைத்தொடர்ந்து கொரனா உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது. ஊரடங்கு தளர்வு காரணமாக படப்பிடிப்பு தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கமல் அரசியல் கட்சி தொடங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாலும், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தொகுத்து வருவதாலும் பிஸியாக உள்ளார். இதனால் படப்பிடிப்பில் பங்கேற்பது சந்தேகம் என்றாலும், படத்தில் கமல் இல்லாத பகுதிகளை காட்சிகளாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story