விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படம் ஹாலிவுட்டில் காப்பி அடிக்கப்பட்டுள்ளதா!?

விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படம் ஹாலிவுட்டில் காப்பி அடிக்கப்பட்டுள்ளதா!?

ஆனந்த் சங்கர் என்பவர் இயக்கத்தில் விக்ரம் வேடங்களில் நடித்த ‘இருமுகன்’ படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் ஸ்பீட் என்ற ஊக்கமருந்து பற்றி படம் இருந்ததால் ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டியது இந்தப் படம்.
Movie Review: Iru mugan — Hero worship of a different kind ...
விக்ரம் நெகட்டிவ் ரோலிலும் அசத்தியிருப்பார். நயன்தாரா படத்திற்கு கூடுதல் பலம். நித்யா மேனன், நாசர், கருணாகரன், தம்பி ராமைய்யா என பலரும் நடித்திருந்தனர்.
ஹாலிவுட் நடிகர் ஜேமி பாக்ஸ் நடித்த ப்ராஜெக்ட் பவர் என்ற படம் 2017-ம் ஆண்டு வெளியானது. தற்போது இந்தப் படம் நெட்பிலிக்ஸில் ஸ்ட்ரீமிங்-ல் உள்ளது. அதையடுத்து ப்ராஜெக்ட் பவர் படம் விக்ரம் நடித்த இருமுகன் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாக செய்திகள் பரவின.
Jamie Foxx shares his best advice - Business Insider
இந்த செய்தியை இந்தப் படத்தைத் தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இந்த செய்தியை மறுத்துள்ளனர். இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் “சீயான் விக்ரம் நடித்த இருமுகன் படத்தின் ரீமேக் உரிமைகளை நாங்கள் இதுவரை விற்கவில்லை. இது சமூக ஊடங்களில் பரவி வரும் வதந்தி குறித்த தெளிவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story