வெளிநாட்டுக்குப் போகாமல் படத்தை முடிக்க முடியாது… ‘வலிமை’ படத்திற்கு ஹெச். வினோத் கண்டிஷன்!?

வெளிநாட்டுக்குப் போகாமல் படத்தை முடிக்க முடியாது… ‘வலிமை’ படத்திற்கு ஹெச். வினோத் கண்டிஷன்!?

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படம் ரேஸிங்கை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் வெளிநாடுகளில் பல ஸ்டண்ட் மற்றும் ரேஸிங் காட்சிகள் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால் லாக்டவுன் ஆரம்பித்ததால் படம் முடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் இன்னும் தொடர்ந்து வருவதால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நெருக்கடியில் படக்குழு உள்ளனர்.

வெளிநாட்டுக்குப் போகாமல் படத்தை முடிக்க முடியாது… ‘வலிமை’ படத்திற்கு ஹெச். வினோத் கண்டிஷன்!?

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய வினோத், வெளிநாடுகளில் ஷூட்டிங் பண்ணாமல் படத்தை முடிப்பது இயலாத காரியம், ஏனெனில் முக்கியமான காட்சியில் சர்வதேச ஸ்டண்ட்மேன்கள் அதிகம் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Image

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து அஜித் – எச்.வினோத் கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.போனி கபூர் தயாரிக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது இப்படத்தில் படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

Share this story