கோலமாவு விற்க தயாராகும் ஜான்வி கபூர் !

கோலமாவு விற்க தயாராகும் ஜான்வி கபூர் !

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கோலமாவு கோகிலா’. இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஆர்.எஸ்.சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார் .

கோலமாவு விற்க தயாராகும் ஜான்வி கபூர் !

இந்த படம் தமிழில் நல்ல வரவேற்பைப்பெற்றதால் இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி நயன்தாரா கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஹிந்தியில் ரீமேக் ஆகும் இப்படத்தை ஆனந்த் எல்.ராய் தயாரிக்கவுள்ளார்.

கோலமாவு விற்க தயாராகும் ஜான்வி கபூர் !

இந்நிலையில் ‘குஞ்சன் சக்சேனா – தி கார்கில் கேர்ள்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜான்வி கபூர் தனது அடுத்த தனது அடுத்த படமான ‘கோலாமா கோகிலா’ ரீமேக்கில் நடிக ஆயத்தமாகியுள்ளார்.

அதன்படி 2021 ஜனவரி 9 ஆம் தேதி பணியைத் தொடங்க அவர் ஜனவரி 7 ஆம் தேதி பஞ்சாபிற்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story