‘களத்தில் சந்திப்போம்’… தீபாவளி ரேஸில் இணைந்த ஜீவா- அருள்நிதி கூட்டணி!?

‘களத்தில் சந்திப்போம்’… தீபாவளி ரேஸில் இணைந்த ஜீவா- அருள்நிதி கூட்டணி!?

ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள களத்தில் சந்திப்போம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

என் ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ள படம் களத்தில் சந்திப்போம். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

‘களத்தில் சந்திப்போம்’… தீபாவளி ரேஸில் இணைந்த ஜீவா- அருள்நிதி கூட்டணி!?

ஜீவாவிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை பிரியா பாவனி ஷங்கரம் நடித்துள்ளனர். ரோபோ ஷங்கர், பாலா சரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘களத்தில் சந்திப்போம்’… தீபாவளி ரேஸில் இணைந்த ஜீவா- அருள்நிதி கூட்டணி!?

தற்போது இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகத் தயாராக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளனர். இப்படத்தைத் தீபாவளியில் தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

‘களத்தில் சந்திப்போம்’… தீபாவளி ரேஸில் இணைந்த ஜீவா- அருள்நிதி கூட்டணி!?

சமீபத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் சந்தோஷ் ராஜன் என்பவர் இயக்கத்தில் ஜீவா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. காஷ்மிரா பர்தேஷி மற்றும் பிரயாக் நாகரா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

Share this story