பிரபல சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகைக்கு திருமணம்… வாழ்த்தும் ரசிகர்கள் !

பிரபல சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகைக்கு திருமணம்… வாழ்த்தும் ரசிகர்கள் !

கல்யாண வீடு சீரியலில் நடித்த பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

பிரபல சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகைக்கு திருமணம்… வாழ்த்தும் ரசிகர்கள் !

கடந்த 2018ம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் ‘கல்யாண வீடு’. இல்லத்தரசிகளின் அமோக ஆதரவோடு விறுவிறுப்பாக இந்த சீரியல் ஒளிப்பாகி வந்தது. பல்வேறு திருப்பங்களோடு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல், 600-க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து, கடந்தாண்டு முடிவடைந்தது. இந்த சீரியலை, புகழ்பெற்ற ‘மெட்டி ஒலி’ சீரியலை இயக்கிய திருமுருகன் இயக்கியிருந்தார்.

பிரபல சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகைக்கு திருமணம்… வாழ்த்தும் ரசிகர்கள் !

இந்த சீரியலின் நாயகனாக திருமுருகன் நடித்திருந்தார். இந்த சீரியலின் ஹீரோயினாக ஸ்பூர்த்தி கவுடா நடித்திருந்தார். அதன்பிறகு இவருக்கு திருமணம் நடைபெற்றதால், ஸ்பூர்த்தி மாற்றப்பட்டு கன்னிகா ரவி நடித்து வந்தார். மேலும் மூத்த நடிகர் மௌலி, ஆர்.சுந்தர்ராஜன், ரம்யா, சவிதா உள்ளிட்ட பலர் நடித்தனர்.

பிரபல சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகைக்கு திருமணம்… வாழ்த்தும் ரசிகர்கள் !

இந்நிலையில் இந்த சீரியலில் நடித்திருந்த நடிகை கீதாஞ்சலிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார். அந்த பதிவில் தனது திருமண புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். நடிகை கீதாஞ்சலிக்கு சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story