ஜெயலலிதாவை அடுத்து கண்ணகியாக நடிக்கும் கங்கனா ரணாவத்!
நடிகை கங்கனா, இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாக உருவாக இருக்கும் புதிய படத்தில் கண்ணகி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
கங்கனா தற்போது ஏஎல் விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கங்கனா, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரவிந்த் சாமி இந்தப் படத்தில் எம்.ஜி.ஆராக நடித்துள்ளார்.
தலைவி படம் ஏப்ரல் 23-ம் தேதி வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதை அடுத்து படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தலைவி படத்திற்கு இயக்குனர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் திரைக்கதை எழுதினார். அதனால் இயக்குனர் விஜய்க்கு அவருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழின் தலைசிறந்த காவியம் சிலப்பதிகாரத்தை விஜயேந்திரபிரசாத் கையில் கொடுத்து அதற்கு திரைக்கதை அமைக்குமாறு கேட்டாராம். அதற்கு விஜயேந்திர பிரசாத்தும் ஓகே சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, இந்தக் கதையில் கண்ணகி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கங்கனாவிடம் ஏஎல் விஜய் கேட்டதாகவும் அவரும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. தலைவி படம் ரிலீஸ் ஆன பிறகு இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.