கைதி ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் கத்ரினா கைப்… !

கைதி ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் கத்ரினா கைப்… !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. ஹீரோயின், பாடல், டான்ஸ் என்று தமிழ் சினிமா கிளிஷேக்களில் எதுவுமே இல்லாமல் எக்ஸ்பிரிமெண்ட் ஆக எடுக்கப்பட்ட கைதி படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்த படத்தில் நரேன், தீனா, அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
கைதி ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் கத்ரினா கைப்… !
கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கைதி ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் கத்ரினா கைப்… !
கைதி படத்தில் ஹீரோயின் யாரும் காண்பிக்கப்படவில்லை. கார்த்தி ஒரு பிளாஷ்பேக் மட்டும் தான் சொல்வார். ஆனால் ஹிந்தி ரீமேக்கிற்காக கதையில் சில மாற்றங்கள் செய்துள்ளார்களாம். அதிக டேட் தேவையில்லை என்பதால் கத்ரினா இந்தப் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

Share this story