மாஸ்டர் படத்தை ஓரங்கட்டி முதலிடம் பிடித்த ‘கேஜிஎப் 2’

மாஸ்டர் படத்தை ஓரங்கட்டி முதலிடம் பிடித்த ‘கேஜிஎப் 2’

டீசர் வெளியிடப்பட்ட நிலையில் மாஸ்டர் சாதனையை கேஜிஎப் 2 முறியடித்துள்ளது.

மாஸ்டர் படத்தை ஓரங்கட்டி முதலிடம் பிடித்த ‘கேஜிஎப் 2’

யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படம் கேஜிஎப். இந்தப் படம் உலக அளவில் பெரிய வெற்றியை பெற்றது. இந்த பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல்,கேஜிஎப்பின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக எடுக்கப்போவதாக அறிவித்தார். இதையடுத்து படம் தொடங்கப்பட்டு பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தை ஓரங்கட்டி முதலிடம் பிடித்த ‘கேஜிஎப் 2’

இப்படத்தின் டீசர் நேற்று இரவு வெளியிடப்பட்டது. வெளியானது முதல் யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அதன்படி 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளை பெற்ற இந்திய பட டீசர் என்ற சாதனையை கேஜிஎப் 2 படைத்துள்ளது. இதற்கு முன் 1.85 மில்லியன் லைக்குகளை பெற்று மாஸ்டர் படம் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது கேஜிஎப் 2 டீசர் 10 மணிநேரத்தில் 2 மில்லியன் லைக்குகளை பெற்று அதனை முறியடித்துள்ளது.

Share this story