2022 ரீவைண்ட் - நம்மை விட்டு பிரிந்து சென்ற திரைப்பிரபலங்கள்

2022ஆம் ஆண்டு இன்றுடன் நிறைவடைகிறது. இந்தாண்டில் மனதுக்கு நெருக்கமான , மகிழ்ச்சியான பல விஷயங்கள் நடந்துள்ளன. அதேசமயம் பல துயர நிகழ்வுகளும் நம்மை கலங்க வைத்திருக்கும். அந்த வகையில் இந்தாண்டு நம்மை விட்டு மறைந்த திரைப் பிரபலங்களை நினைவு கூர்வோம்.
பிப் 7: நடிகர் பிரவீன்குமார் சோப்தி மறைவு
நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பீம்பாய் என்ற வேடத்தில் நடித்த பிரவீன்குமார் சோப்தி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 74
பிப் 22: மலையாள நடிகை கே.பி.ஏ.சி.லலிதா மறைவு
காதலுக்கு மரியாதை, கிரீடம் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை கே.பி.ஏ.சி.லலிதா உடல்நலக்குறைவால் மறைந்தார். அவருக்கு வயது 74
ஏப் 28: நடிகர் சலீம் கவுஸ் மறைவு
சின்னக்கவுண்டர், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் சலீம் கவுஸ் தனது 70ஆவது வயதில் உடல்நல கோளாறு காரணமாக மறைந்தார்.
ஏப் 29: நடிகை ரங்கம்மாள் பாட்டி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 83.
மே 7 கேஜிஎஃப் படத்தில் நடித்த பிரபல கன்னட நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார்..
மே 22: பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித் சிறுநீரக பிரச்னை காரணமாக மறைந்தார். இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மிஸ்டர் ரோமியோ படத்தின் தண்ணீரை காதலிக்கும் போன்ற பல பாடல்களைப் பாடியது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 1: பிரபல பின்னணி பாடகர் கே.கே. என்ற கிருஷ்ணகுமார் தனது 53வது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
ஜூன் 27: தமிழில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் 'பூ' ராமு மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஜுலை 11: அவன் - இவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ராமராஜ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
ஜூலை 15: பிரபல இயக்குநரும் நடிகருமான பிராதப் போத்தன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 70.
செப் 2: பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 48. இவர் புல்லினங்கால், சிம்டாங்காரன், பொன்னி நதி உள்ளிட்ட பாடல்களை பாடியது குறிப்பிடத்தக்கது.
செப்18: நடிகை தீபா காதல் தோல்வி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் வாய்தா, துப்பறிவாளன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
செப் 26 இசையமைப்பாளரும் , இயக்குனருமான எஸ்.வி. ரமணன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். தொலைக்காட்சி ,வானொலி, விளம்பரம், திரைப்படம் என அனைத்து துறைகளிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் எஸ்.வி. ரமணன்
அக் 7 :இந்தி நடிகர் அருண் பாலி உடல்நலக்குறைவால் காலமானார். நடிகர் கமல் ஹாசனின் ஹேராம், 3 இடியட்ஸ் ,கேதார்நாத் ,பானிபட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.
அக் 23 பிரபல கலை இயக்குநர் சந்தானம் மாரடைப்பால் காலமானார். ‘ஆயிரத்தில் ஒருவன்’,விக்ரம் நடித்த ‘தெய்வத்திருமகள்’உள்ளிட்ட படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
நவ 15: நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
டிச 3 இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்ட பலர் நடித்த ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில், சக கபடி வீரராக நடித்த ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் காலமானார்.
டிச 24: மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த மாயி சுந்தர் மஞ்சள் காமாலை நோயால் தனது 50வது வயதில் மரணமடைந்தார்.