படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ’கார்கி’ பட இயக்குனர்

கார்கி

கார்கி பட இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்கி

சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் கார்கி. இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன் கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகிவரும் சூழலில், அதனி மையமாக வைத்து எடுக்கப்பட்டதே கார்கி. சமூகத்துக்கு மிக அவசியமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் படியான கதைக்களம் கொண்ட இப்படம் மிகப்பெரிய அளவு வெற்றிபெற்றது. இளைஞர்கள் மட்டும் இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் கொண்டாடும் படமாக கார்கி அமைந்தது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு  பெருந்துணையாக இருந்த நிர்வாக தயாரிப்பாளர் அனந்த பத்மநாபன் அவர்களுக்கு படத்தின் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் கார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் இப்படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல இருக்கிறார். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Share this story