திருநங்கைகளின் மேல் மரியாதையை ஏற்படுத்தும் சுதா கொங்கராவின் இயக்கம் !

திருநங்கைகளின் மேல் மரியாதையை ஏற்படுத்தும் சுதா கொங்கராவின் இயக்கம் !

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நாளை வெளியாக இருக்கும் ”பாவ கதைகள்” அந்தாலஜி படத்தில், சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் என தமிழ் சினிமாவின் நான்கு சிறந்த இயக்குனர்கள் நான்கு பகுதிகளை இயக்கியுள்ளனர். இப்படத்தின் ட்ரைலரே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப்பெற்றது.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் முதல் தமிழ் அந்தாலஜி திரைப்படமான இதில் காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளை சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளின் மேல் மரியாதையை ஏற்படுத்தும் சுதா கொங்கராவின் இயக்கம் !

சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘தங்கம்’ பகுதியில் பவானிஶ்ரீ, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு பாக்கியராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஷான் கருப்பசாமி, சுதா கொங்கரா இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். இப்பகுதியில் சாந்தனுவின் காதலுக்கு உயிர் தியாகம் செய்து உதவி செய்யும் ஒரு திருநங்கையாக காளிதாஸ் நடித்துள்ளார்.

திருநங்கைகளின் மேல் மரியாதையை ஏற்படுத்தும் சுதா கொங்கராவின் இயக்கம் !

இதுகுறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் சுதா கொங்குரா ,
”திருநங்கைகளின் உணர்வுகளையும் ஆசைகளையும் அவர்களது போராட்டங்களின் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவர்கள் சார்ந்த சமூகம் குறித்த ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டேன், மேலும் பல்வேறு நபர்களின் சந்தித்தேன். அப்பட்டமான அனைத்து உணர்ச்சிகளையும் கொண்ட இந்த ஆழமான கதையை 30 நிமிடங்கள் சொல்வது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. இதை பார்க்கிறவர்கள் நிச்சயம் திருநங்கைகளின் வலி நிறைந்த வாழ்க்கையை உணர்வார்கள் . அதன் பிறகு சந்திக்கும் திருநங்கைகளை மரியாதையுடன் அணுகுவார்கள் ” என கூறியுள்ளார்

Share this story