பிரபல கால்பந்து வீரர் மறைவு… கோலிவுட் பிரபலங்களின் அஞ்சலி!

பிரபல கால்பந்து வீரர் மறைவு… கோலிவுட் பிரபலங்களின் அஞ்சலி!

பிரபல அர்ஜென்டினா கால்பந்துவீரர் டியாகோ மரடோனா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 60.

1986 ஆம் ஆண்டு அர்ஜென்டினா நாட்டிற்காக உலகக் கோப்பையை வென்ற புகழ்பெற்ற கால்பந்து வீரர் டியாகோ மரடோன. இவர் கால்பந்து விளையாட்டில் உலகளவில் பிரபலம் மிக்கவர்.

Image

கால்பந்து விளையாட்டிற்கு உலகம் முழுக்க பெருவாரியான ரசிகர்கள் இருப்பதால், மரடோனாவின் மறைவு செய்தி உலகம் முழுக்க மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது மறைவை அடுத்து உலக கால்பந்து வீரர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது கோலிவுட் பிரபலங்கள் கூட மரடோனா பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு அவருக்கு வீரருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Share this story