வெற்றிகரமான 100வது நாளில் 'தல அஜித்'தின் ‘துணிவு’ – போஸ்டர் வெளியிட்ட படக்குழு.

photo

அஜித் குமார் நடித்து கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘துணிவு’. போனிகபூர் தயாரிப்பில் உருவான இந்த படத்தை எச். வினோத் இயக்கியிருந்தார். இது இவர்களது கூட்டணியில் வெளியான மூன்றாவது திரைப்படம். துணிவு  அஜித்துடன் இணைந்து, மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தின் பாடல்களான  சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா ஆகிய பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

photo
இந்த நிலையில் வங்கி கொள்ளையை மைய்யமாக வைத்து தயாரான இந்தபடம் வெளியாகி 100 நாட்கள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த போஸ்டரை இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இந்த படத்தை அடுத்து அஜித்தின் அடுத்த படமான அவரின் 62வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் பல மாதங்களாக காத்துள்ளனர். அதே நாளில் வெளியான தளபதி விஜய்யின் 'வாரிசு' படமும் இன்றுதனது 100வது நாளை கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

photo

Share this story