11ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்யின் ‘துப்பாக்கி’.

photo

இளைய தளபதி விஜய்யின் சினிமா வாழ்கையில் முக்கியமான படம் ‘துப்பாக்கி’. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இந்த படம் விஜய்யின் சினிமா வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால், ஜெயராம், சதயன், மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்திருந்தனர்.

photo

 போக்கிரி படத்துக்கு பின்னர் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன், வில்லு, குருவி, வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் அடுத்து வெளியான காவலன், வேலாயுதம் படங்கள் சொல்லிக்கொள்ளும் படியாக ஓடின; தொடர்ந்து வெளியான நண்பன் சூப்பர் ஹிட்டாகவே விஜய்யின் சினிமா வாழ்கை சூடுபிடிக்க துவங்கியது. அந்த வரிசையில் துப்பாக்கி படத்துக்கு தனி இடம் உண்டு. மிரட்டலான காட்சிகள் குறிப்பிட்டு சொல்லும்படியான மாஸ் ஆக்ஷன் என படம் அந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக வெளியான நாள் இன்று.

Share this story