12 ஆண்டுகளை நிறைவு செய்த ‘மயக்கம் என்ன’.

photo

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ரிச்சா கங்கோபத்யப் ஆகியோர் இணைந்து நடித்த படம் ‘மயக்கம் என்ன’. இந்த படம் வெளியாகி இன்றோடு 12ஆண்டுகள் ஆகிறது.

photoமயக்கம் என்ன…. வன புகைப்படபிடிப்பாளராக வரவேண்டும் என தீராத காதல் கொண்ட இளைஞர்தான் தனுஷ். ஆனால் எவ்வளவோ திறமை இருந்தும் அவரது படைப்புகள் ஒருவரால் சிரண்டப்பட்டு அவர் முன்னணி கலைஞராகிவிடுகிறார். இதனால் மனம் உடைந்த தனுஷ் தொடர்ந்து வாழ்வில் சாதிக்க என்ன செய்தார். அவருக்கு துணையாக அவரது மனைவி ரிச்சா என்ன செய்தார் என்பதே படத்தின் கதை. படத்தில் ஒவ்வொரு உணர்வுகளையும் கனகச்சிதமாக கடத்தியிருப்பார் செல்வராகவன். படத்தில் வரும் பாடல்கள், மேக்கிங் என அனைத்துமே சிறப்பாக இருக்கும், ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் இன்றும் பலரது பிளே லிஸ்டில் இருக்கும். இந்த நிலையில் படம் வெளியாகி 12ஆண்டுகளை நிறைவு செய்வது நினைவுகூறத்தக்கது.

Share this story